Home City மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் சென்னை-புறநகரில் ஆய்வு…

மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் சென்னை-புறநகரில் ஆய்வு…

0
       சென்னை மற்றும் புறநகரில் மழைநீர் வடிகால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை  தொடங்கும்  முன்பே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு   பிறப்பித்து   இருந்தார்.       ஆனாலும்       பல இடங்களில் 75 சதவீதம் அளவுக்கு தான்  பணிகள் நடந்துள்ளன. எனவே  பணிகளை விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்        அதிகாரிகளுக்கு     தேவையான அறிவுரைகளை  வழங்கி  வருகிறார்.           
      வடகிழக்கு      பருவமழை இன்னும்    20      நாட்களில் தொடங்கிவிடும்        என்பதால் சென்னை  புறநகரில்  மழைநீர் வடிகால் பணிகள்     எந்த   அளவுக்கு நடைபெற்றுள்ளன என்பதை முதல்-அமைச்சர்    நேரில்     சென்று பார்வையிட்டார்.    இதற்காக      தென் சென்னைக்கு      உட்பட்ட      8 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர்    வடிகால்     மற்றும் வெள்ளத்தடுப்பு       பணிகளை பார்வையிட்டு        ஆய்வு மேற்கொண்டார். 
      செம்மஞ்சேரி   டி.எஸ்.எப். பின்புறம், பெரும்பாக்கம் அருகே உள்ள பாலம், நேதாஜி நகர் பிரதான சாலை, வேளச்சேரி-தாம்பரம் சாலையில் உள்ள பாலாஜி பல் மருத்துவ   கல்லூரி    அருகே கட்டப்படும்  மழைநீர்  வடிகால் பணிகளை     பார்வையிட்டார்.     
வேளச்சேரி       ஏ.ஜி.எஸ், பள்ளிக்கரணை, தாமரைக்குளம் பகுதி, ;காலனி, அடையார்  கஸ்தூரிபாய் நகர் 3-வது  பிரதான  சாலை,  இந்திரா நகர் 3-வது  பிரதான    சாலை ஆகிய இடங்களுக்கும்     சென்று      ஆய்வு மேற்கொண்டார். மொத்தம் ரூ.174.48 கோடி செலவில் நடைபெற்று வரும் பணிகளை  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 29ஃ09ஃ2022 அன்று     ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.