Home City அரசுப் பேருந்து நடத்துனர் பணிக்கான தகுதி- பெண்களுக்கான உயரம் 150 செ.மீ ஆக குறைப்பு…

அரசுப் பேருந்து நடத்துனர் பணிக்கான தகுதி- பெண்களுக்கான உயரம் 150 செ.மீ ஆக குறைப்பு…

0

அரசுப் பேருந்துகளில் அதிக மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், அரசுப் பேருந்துகளில் நடத்துநர் பணிக்கு தேர்வாகும் மகளிருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செ.மீட்டரில் இருந்து 150 செ.மீ ஆக குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பால் அரசுப்பேருந்துகளில் நடத்துநர் பணிக்கு அதிக அளவில் மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version