அடையாறு மண்டலம், 178வது வார்டு, தரமணி ஏரி, 30 ஏக்கருக்கு மேல் பரப்பு கொண்டது. சுற்றி, ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த ஏரியில் ஆகாய தாமரை படர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் கொசுப்புழு உற்பத்தி அதிகரித்து, சுற்றுவட்டார குடியிருப்புகளில் கொசுக்களின் பெருக்கம் அதிகரித்தள்ளது. மேலும், ஏரி நீர் வற்றவும் ஆகாய தாமரை ஒரு காரணமாக உள்ளது. மூன்று இடங்களில் இருந்து வரும் கழிவுநீர், ஏரியில் கலக்கிறது. இதனால், ஏரி நீர் மாசடைந்துள்ளது. ஆகாய தாமரையை அகற்றி, கழிவுநீர் வரும் பாதையை அடைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.