Home City தமிழகத்தில் 7 நாட்களுக்குமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 7 நாட்களுக்குமழைக்கு வாய்ப்பு…

0
சென்னை     வானிலை ஆய்வுமையம்    வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 26.07.2024 மற்றும் 27.07.2024   தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில்  கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது. 
28.07.2024 முதல் 01.08.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
சென்னை  மற்றும்   புறநகர் பகுதிகளுக்கான     வானிலை முன்னறிவிப்பு:  நகரின்   ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 -37டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version