Home City பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு…

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு…

0
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்தது. இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 84 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை வென்று 18-வது இடத்தை பிடித்தது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் (டி.63 பிரிவு) வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் மாரியப்பன் இன்று நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாரியப்பன், ரியோ ஒலிம்பிக்கில் (2016-ம் ஆண்டு) தங்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) வெள்ளியும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version