சென்னை வேளச்சேரியில் 2.10.22 அன்று காலை 9.30 மணியளவில் டான்சி நகர் நல்வாழ்வு சங்கம் மற்றும் VRSI பல்நோக்கு மருத்துவமனை இணைந்து 153 வது காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளில் இருவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து OMR & ECR நீர் நிலை பாதுகாப்பு இயக்கம்
சார்பில் வேளச்சேரியில் 500 பனை விதைகள் நடும் நிகழ்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்துழைப்பு கொடுத்து உதவிய செஞ்சிலுவை சங்கம் சென்னை மாநில கிளையை சார்ந்தவர்களை கௌரவித்து நினைவு பரிசு வழங்கும் நிகழ்வில் 177 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. பெ மணிமாறன் MA MC.. அவர்கள், VRSI பல்நோக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் திரு.TR.சகாதேவன், இருவரும் இணைந்து நினைவு பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்வில் செஞ்சிலுவை சங்கம், நீர் நிலை பாதுகாப்பு நிர்வாகிகள், டான்சி நகர் சங்க நிர்வாகிகள், கழக தோழர்கள், மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வேளச்சேரியில் ஒரு பனங்காடு…
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நமது பகுதிகளில் பனைமரம், ஈச்சமரம் போன்ற மரங்கள் அதிக இடங்களில் காணப்பட்டது. மிகவும் அழகான கிராம சூழ்நிலையில் இருந்த வேளச்சேரி பகுதி நகரமயமானதால் அழகிய கிராம சூழ்நிலைகள் மாறிவிட்டது. தற்போது மீண்டும் வேளச்சேரி பகுதியை கிராம சூழ்நிலைக்கு கொண்டுவர வேண்டி டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் முயற்சியால் சுமார் 500 பனைமர விதைகளை விதைக்க இருக்கின்றோம். தற்போது டான்சிநகர், விஜிபி செல்வாநகர், புவனேஷ்வரி நகர் ஆகிய இடங்களில் 100 பனைவிதைகளை தற்போது விதைத்துள்ளோம். இந்த வாராத்திற்குள் 400 விதைகளும் விதைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.துரை அவர்கள் கல்லுக்குட்டை, திரு. I.A.S.கேன்ஸ் சௌந்த் வேளச்சேரி, அவர்களும். நம்மோடு இனைந்து விதைகள் விதைக்க உதவிபுரிந்தனர்.என்பதைதெரிவுத்துக் கொள்கிறேன். திரு.துரை அவர்கள் பெருங்குடி ரயில்நிலையம் பகுயில் சுமார் 500 பனைவிதைகளை விதைத்துள்ளார்கள். அவர்களுக்கு டான்சிநகர் நலவாழ்வு சங்கதின் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் முயற்சியால் சுமார் 500 பனைமர விதைகளை விதைத்து வருகின்றன. 06/10/22 அன்று வேளச்சேரி நாட்டார் குளக்கரையில் 177வது வட்டசெயலாளர் திரு.தாமோதரன் தலைமையில் 30,பனைவிதைகள் விதைக்கப்பட்டுள்ளன.