தரமணி லிங்க் சாலை LIC காலனி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்கிவருகின்றது. இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பட்டு சுமார் முப்பது ஆண்டுகள் ஆகின்றது. அந்த காலகட்டத்தில் குடியிருப்பு பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள். மிக குறைவாக இருந்தன. 179, வது வார்டாக இருந்த இந்த பகுதி தற்போது 177, வது வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வார்டு மிகபெரிய வார்டாக உள்ளன. வேளச்சேரி பய்பாஸ் சாலை மறுபுறத்தில் இருந்து தொடங்கி வேளச்சேரி மெயின் ரோடு பகுதி தண்டீஸ்வரம், டான்சிநகர், சாரதிநகர், பலமுருகன்நகர், விஜிபி செல்வாநகர், வீனஸ்காலனி, பாலகிருஷ்ணாநகர், அன்னை இந்திராநகர் போன்ற பத்திற்க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. மேற்கண்ட பகுதிகளில் பல குடியிறுப்புகள் பல அடுக்குமாடி குடியிறுப்புகளும் உள்ளன. மருத்துவமனை, பள்ளிகள், கோயில்களும் இருக்கின்றன. இந்த பகுதிகளில் உள்ள கழிவுநீர் அனைத்தும் மேற்கண்ட தரமணிலிங்க் சாலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைத்தில் வந்தடைந்து திருவான்மியூர் போன்ற பகுதி வழியாக வெளியேற்றபடுகிறது. ஆனால் இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவு மிகுவும் குறைவாக இருப்பதால் மழைகாலங்களில் விரைவாக சுத்திகரிப்பு செய்ய முடியாமல் போவதால். புல தெருக்களில் கழிநீர் மூடிவழியாக தெருக்களில் வழிந்தோடும் நிலை ஏற்படுகின்றன. அதன் காரணமாக சுகாதாரகேடு ஏற்படுவதோடு துர்நாற்றம் வீசுவதால் பொது மக்கள் அனைவரும்இதனால் பாதிப்புள்ளாகிறாற்கள். ஆகவே தற்போதுள்ள சூழ்நிலைகேற்ப எங்கள் பகுதியில் விரைவில் மற்றொரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டி கோரிக்கை வைக்கப்படுகின்றது .
ம.பாலகிருஷ்ணன்
பொதுசெயலாளர்
டான்சி நகர் நலவாழ்வு சங்கம்.