Home City சென்னை விமான நிலையத்தில் பயணிகள் குறுகிய நேரம் ஓய்வெடுக்க நவீன வசதிகளுடன் கூடிய அறை திறப்பு…

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் குறுகிய நேரம் ஓய்வெடுக்க நவீன வசதிகளுடன் கூடிய அறை திறப்பு…

0

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் வருகை பகுதியில் கண்வேயர் பெல்ட்-1 அருகே பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமானத்தில் செல்லும் பயணிகள், வேறு நகரங்களில் இருந்து சென்னை வந்து பிற நகரங்களுக்கு செல்ல காத்திருக்கும் பணிகள் குறுகிய நேரம் ஓய்வெடுக்க அதிநவீன வசதிகள் கொண்ட ‘கேப்சூல்’ தங்கும் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் 4 ‘கேப்சூல்’ தங்கும் அறைகள் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது. குறுகிய நேர ஓய்வுக்காக இந்த அறைகள் தேவைப்படும் பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். இதனை இயக்குனர் சரத்குமார் திறந்து வைத்தார்.

Exit mobile version