நமது வேளச்சேரி சிவ விஷ்ணு ஆலையத்தில் 12ஆம் தேதி அன்று பவித்ர உற்சவம் நடைபெற்றது. 13ஆம் தேதி பவித்ரோத்ஸவம், ம்ருத்சங்கர ரணம் (பூமி பூஜை), மற்றும் அங்குரார்பணம் செய்யப்பட்டது.
ரக்ஷாபந்தனம் பின் பெருமாள் யாக சாலை எழுந்தருளி கும்ப மண்டல ஸ்தாபனம், அங்குர ஹோமம், பவித்ர பிரதிஷ்டை நடைபெற்றது.
14ஆம் தேதி காலை 8.00 மணிக்கு யாக சாலை கும்ப, மண்டல ஆராதனம், பெருமாளுக்கு 65 ஆராதனம், ஹோமம் பிறகு பவித்ரம் சாற்றுதல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பவித்ரோத்ஸவம் இரண்டாவது நாள் 3ஆம் கால ஹோமமும், 195 ஆரதானமும் நிறைந்தது. 3 நாட்களில் 6 கால ஹோமமும், 365 ஆராதனைகளும், கும்ப, மண்டல, அக்னி பிம்ப (உற்சவ திருமேனி) வடிவில் பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
16ஆம் தேதி புதன்கிழமை அன்று பவித்ர உற்சவம் மிகச்சிறப்பாக முடிவடைந்தது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.