Home City சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைப்பெற்ற தவன உற்சவம்…

சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைப்பெற்ற தவன உற்சவம்…

0

நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் 25/02/2023 அன்று சிறப்பாக நடைப்பெற்ற தவன உற்சவம் . உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ பெருமாளுக்கும் அம்பாளுக்கும் நடைபெற்ற சிறப்பு அலங்காரம் . இந்த நிகழ்ச்சியில் பக்த கோடிகள் அனைவரும் பங்கு கொண்டு சுவாமி அருள் பெற்றனர்.

ஆலயங்களிலுள்ள நந்தவனத்தில் சுவாமி எழுந்தருளி அங்குள்ள செடி, கொடி, மலர் உள்ளிட்ட தாவரங்களுக்கு அனுக்கிரஹம் செய்வதற்காக நடத்தப்படும் உற்சவமே தவன உற்சவம் என்றழைக்கப்படுகிறது. தவன எனும் மரிக்கொழுந்தானது மலர்களிலேயே அதிக நறுமணம் தரக்கூடியது. மரிக்கொழுந்து மலர்களாலேயே சுவாமிக்கு மாலை, தோரணம் கட்டி அதிக நறுமணம் கொண்ட அனைத்து அலங்காரங்களும் செய்யப்பட்டு பூஜை நடைபெறும். மனதை சுண்டி இழுக்கும் மரிக்கொழுந்து மலரின் வாசத்தால் இறைவன் மனம் குளிர்ந்து கேட்ட வரத்தை அருட்பாலிப்பார் என்றும், அந்த மரிக்கொழுந்து மலர் காயக்காய அதன் நறுமணம் அதிகரிப்பது போல, மனிதர்கள் கஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு இறைவனை வணங்கக்கூடிய நேரத்தில் கஷ்டங்கள் நீங்கும் வகையில் இறைவனையும் குளிரவைத்து, பக்தனையும் குளிரவைக்கும் வகையில் நடத்தப்படுவதே தவன உற்சவம்.