Home City சிவா விஷ்ணு ஆலயத்தில் திருகார்த்திகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள்…

சிவா விஷ்ணு ஆலயத்தில் திருகார்த்திகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள்…

0

நமது வேளச்சேரி விஜய நகரில் அமைந்துள்ள ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில் 19ஆம் தேதி அன்று திரு கார்த்திகையை முன்னிட்டு ஸ்ரீ மீனாக்ஷி, ஸ்ரீசுந்தரேஸ்வர், ஸ்ரீமுருகன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஐயப்பன் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பெருமாள்- தாயார் அவர்களுக்கு அலங்காரம் செய்து கார்த்திகை மண்டபம் சேர்ந்தார். மாலை 6.00 மணி மடப்பள்ளியிலிருந்து தீபம் எடுத்தல், சன்னிதிகளில் கார்த்திகை தீபங்கள் ஏற்றி, மாலை 6.45 மணிக்கு மேல் பொழுது பார்த்து சொக்கப் பானை ஏற்றப்பட்டு சாமிக்கு மகா தீபாரதனையும் நடைபெற்றது. இத்திருகார்த்திகை தீப திருநாளில் பக்தர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version