Home City சிவா விஷ்ணு ஆலயத்தில் கார்த்திகை கடைசி சோமவார வழிபாடு…

சிவா விஷ்ணு ஆலயத்தில் கார்த்திகை கடைசி சோமவார வழிபாடு…

0

சென்னை வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் கார்த்திகை கடைசி சோமவரத்தை முன்னிட்டு ஸ்ரீசுந்தரேஸ்வரர் ராஜா அலங்காரத்தில் காட்சியளித்து அருள் புரிந்தார். பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சிவனாரின் தலையில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பார். கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்பைச் சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லி இருக்கிறார். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம். கார்த்திகை சோமவார நாளில் சிவனாருக்கு நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்யுங்கள். சோமன் என்றால் சந்திரன், அவனுக்கு உரிய தினம் திங்கள் கிழமை. அந்தக் கிழமையை சோம வாரம் என்று குறிப்பிடுவர். பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் சொன்ன வழி.