Home City குரு நானக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்…

குரு நானக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்…

0

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 13.01.2023 அன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் மா.கு. இரகுநாதன் பொங்கல் விழாவை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். பின்பு கல்லூரி மாணவர்கள் தமிழரின் கிராமியக் கலைகளை நினைவு கொள்ளும் வகையில் சிலம்பாட்டம், கரகாட்டம், வீதி நாடகம், இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். மேலும், GNCIIES சார்பில் மாணவர்கள் சுயதொழில் முனைவை வெளிப்படுத்தும் வகையில் 60 அங்காடிகள் அமைத்து பாரம்பரிய உணவுப் பொருட்களை காட்சிப்படுத்தினர். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Exit mobile version