Home City ஓ.எம்.ஆர்.சாலையில் 4 மேம்பாலங்கள் கட்டுவதற்கு 331 கோடி ரூபாய் ஒதுக்கீடு- 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்…

ஓ.எம்.ஆர்.சாலையில் 4 மேம்பாலங்கள் கட்டுவதற்கு 331 கோடி ரூபாய் ஒதுக்கீடு- 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்…

0

சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவையான இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் (ஓ.எம்.ஆர். சாலை) 4 மேம்பாலங்கள் கட்டுவதற்கு மாநில அரசு ரூ.331 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான முதல் தவணையாக ரூ.50 கோடியை வழங்கியுள்ளது. தரமணி-எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சந்திப்பு, எம்.ஜி.ஆர். சாலை-பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு, சோழிங்கநல்லூர் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மேம்பாலங்கள் அமைகின்றன. சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் இணைந்து இப்பணியை மேற்கொள்கின்றன. 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த மேம்பாலங்களுக்கான செலவு ரூ.459.32 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் சாலை மேம்பாட்டு நிறுவனம் ரூ.331 கோடியும், மீதமுள்ள தொகையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனமும் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.