Saturday, May 18, 2024

கேரளா ஸ்டைல் கேரட் பாயாசம்!

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் – 1 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 5-6
உலர் திராட்சை – 5-6
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 1/2 கப்
கேசரி பவுடர் – 1 சிட்டிகை
ஏலக்காய் – 4 (நன்கு தட்டியது)

செய்முறை:

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
  • பின்னர் அதில் கேரட்டைப் போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கி, பின் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • பாலானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைவில் வைத்து, 15 நிமிடம் கேரட்டை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
  • கேரட் நன்கு மென்மையாக வெந்ததும், அதில் கேசரி பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறி, அடுப்பை அணைத்து, பின் தட்டிய ஏலக்காயை சேர்த்தால், சுவையான கேரட் பாயாசம் ரெடி.

Latest article