காமாட்சி அம்மன் விளக்கில் இந்த ஒரு பொருளை போட்டு தீபம் ஏற்றினால், இருள் சூழ்ந்த உங்களது வாழ்க்கை ஒரு நொடிப்பொழுதில் தங்கம் போல மின்ன தொடங்கிவிடும்.
நம்முடைய வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் இருள் என்ற கஷ்டம் சூழ கூடாது என்பதற்காகத் தான், தினம் தோறும் வீட்டில் தீப வழிபாட்டை செய்து வருகின்றோம். வீட்டில் தீப வழிபாட்டிற்காக, நாம் பயன்படுத்தும் விளக்கு என்பது எந்த வகை விளக்காக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
காமாட்சி அம்மன் விளக்கு, வெள்ளி விளக்கு, குத்து விளக்கு, மண் அகல் தீபத்தில் கூட சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு உண்மையான பக்தியோடு இறை வழிபாடு செய்தால் அந்த வேண்டுதல் உடனே நிறைவேறும். அந்த வரிசையில் வீட்டில் இருக்கக் கூடிய காமாட்சி அம்மன் விளக்கில் எந்த பொருளை போட்டு தீபம் ஏற்றினால் நம் வாழ்வு தங்கம் போல மின்னும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம். போதுவாகவே காமாட்சியம்மன் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில்ஓரு ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு, அதன் பின்பு திரி போட்டு தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்தால் நம் வீட்டில் சுப காரியதடை நீங்கும். சொத்து வாங்கும் யோகம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக சொந்த வீட்டை கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள், ஐந்து ரூபாய் நாணயத்தை இப்படியாக காமாட்சி அம்மன் விளக்கில் போட்டு ஏற்றுவார்கள்.
சில பேர் ஒரு ரூபாய் நாணயத்தையும் காமாட்சி அம்மன் விளக்கில் போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருவார்கள். இந்த ஐந்து ரூபாய் நாணயத்தில் தங்க நிறத்தில் இருக்கக்கூடிய நாணயம் கிடைத்தால் மிகவும் சிறப்பானது. உங்கள் வீட்டில் தீபம் ஏற்றும் காமாட்சி அம்மன் விளக்கில் தங்க நிறத்தில் இருக்கும் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு தீபம் ஏற்றலாம். இந்த ஐந்து ரூபாய் நாணயம் ஒரு ரூபாய் நாணயத்திற்கு பதிலாக, சிறிய அளவில் ஒரு கிராமுக்கும் குறைவாகவே தங்கத்தினால் செய்யப்பட்ட மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் கிடைக்கின்றன. இந்த தங்க நாணயத்தை வாங்கி நம் வீட்டுகாமாட்சி அம்மன் தீபத்திலபோட்டு, நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றுவதால் நம் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையத் தொடங்கி, நம்முடைய வாழ்க்கை காலப்போக்கில் தங்கம் போல மின்ன தொடங்கிவிடும்.
தங்க நாணயத்தை போடும்போது நல்லெண்ணெய் ஊற்றி தீப வழிபாடு செய்வதை விட, நெய் ஊற்றி தீப வழிபாடு செய்வது சிறப்பு. தினம் தோறும் இதை செய்ய முடியாதவர்கள் வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது தங்க நாணயத்தில் நெய் ஊற்றி, காமாட்சி அம்மன் தீபம் அல்லது கஜலட்சுமி விளக்கு தீபமேற்ற வேண்டும். மற்ற நேரங்களில் நாணயத்தை எடுத்து சுத்தம் செய்து பீரோவில் பத்திரப்படுத்தி வைத்துக் கோள்ளலாம். நீங்கள் தற்சமயம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை தரம் எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலையானது மாறி, அடுத்தடுத்துஉயர் நிலைக்கு செல்வதற்கு இந்த தீபவழிபாடு துணையாக நிற்கும். வீட்டில் இருக்கும் சகலவிதமான தோஷங்களும் நீங்குவதற்கு இந்த தீபம் வழிவகுக்கும். மகாலட்சுமி தாயார் இந்த தீப ஒளியில் தங்கத்தின் ரூபத்தில் காமாட்சியம்மன் விளக்கில் நிரந்தரமாக உங்களுடைய வீட்டிலேயே தங்கி விடுவார்கள். நம் எல்லோரது வீட்டிலும் காமாட்சியம்மன் விளக்கை கட்டாயமாக ஒரு சிறிய தாம்பல தட்டின் மேல் வைத்துதான் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம். எப்போதுமே அந்த விளக்கிற்கு பக்கத்தில் இரண்டு டைமன் கற்களை வைத்து தீபம் ஏற்றுவது வீட்டில் தன தானியத்தை குறையாமல் பார்த்துக்கொள்ளும். வீட்டின் செல்வ வளம் இனிமையாக வளர்ந்துகொண்டே வரும். தினமும் அந்த கற்கண்டுகளை மாற்றி வைக்க வேண்டும். பழைய கற்கண்டை எடுத்து நீங்கள் சாப்பிட்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் எறும்புகளுக்கு சாப்பிட வைத்தாலும் சரி, தினந்தோறும் புதிய இரண்டு கற்களை வைத்து தீபம் ஏற்றி காமாட்சி அம்மன் தீப வழிபாடு மேற்கொள்ளும் வீட்டில் துயரங்கள் ஏற்பட கஷ்டங்கள் வர வாய்ப்பே இல்லை என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.