சிவபெருமானுக்கு உரிய தினமாக கருதப்படுவது தான் பிரதோஷ தினம் என்று நம் அனைவருக்கும் தெரியும். வளர்பிறை பிரதோஷம் தேய்பிறை பிரதோஷம் என்று மாதத்தில் இரண்டு முறை பிரதோஷம் வரும். வளர்பிறையில் வரக்கூடிய பிரதோஷ நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் நன்மைகள் அனைத்தும் வளர்ந்து கொண்டே போகும் என்று கூறுவார்கள்.
தேய்பிறையில் வரக்கூடிய பிரதோஷ நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போகும் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த தேய்பிறை பிரதோஷம் என்பது திங்கட்கிழமையுடன் சேர்ந்து வருகிறது என்னும் பட்சத்தில் அதற்கு அதிக அளவில் பலன் உண்டாகும். அந்த வகையில் தேய்பிறை சோமவார பிரதோஷ நாள் அன்று சிவபெருமானை எந்த முறையில் வழிபட்டால் கஷ்டங்களும், நோய்களும், கடன் பிரச்சனைகளும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேய்பிறை பிரதோஷ வழிபாடு
தோஷங்களை நீக்கக்கூடியது பிரதோஷம் என்று நம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களும், நோய்களும், கடன்களும் தோஷங்களாகவே கருதப்படுகின்றன. இஐவ அனைத்தையும் நீக்கக்கூடிய ஒரு அற்புத நாளாக தான் பிரதோஷ நாள் திகழ்கிறது. அதிலும் தேய்பிறையில் வரக்கூடிய பிரதோஷ நாளன்று இந்த மூன்று பிரச்சனைகளும் தீர வேண்டும் என்று யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு இவை அனைத்தும் தீரும் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்கு சிவபெருமானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
பிரதோஷ நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று நம் அனைவருக்குமே தெரியும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிவபெருமானுக்கு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய நோய்கள் அனைத்தும் படிப்படியாக விலகும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினம் சிவபெருமானின் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கு வாசனை நிறைந்த மலர்களை வாங்கி தருவதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நம் வாழ்க்கையில் வசந்தம் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் அன்றைய தினத்தில் பிரதோஷ நேரத்தில் வீட்டில் இருக்கக் கூடிய சிவலிங்கத்திற்கு தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒருவேளை சிவலிங்கம் இல்லாத பட்சத்தில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக தேனை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு சிவபெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 101 முறை உச்சரிக்க வேண்டும்.
இப்படி உச்சரித்து சிவபெருமானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் இந்த வழிபாட்டை செய்ய இயலாதவர்கள் இரவு எட்டு முப்பது மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
மந்திரம் “ஹர ஹர மஹாதேவாய நமஹ"
முழு மனதோடு சிவபெருமானுக்கு தேய்பிறை பிரதோஷ நாளில் இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும், நோய்களும், கடன்களும் பிரச்சனைகளும் தேய்ந்து போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.