ஆண் பெண் இருவருக்கும் ஜென்மம் நட்சத்திர நாள் அன்று, திரிதின ஸ்பிரிக், சந்திராஷ்டம நாட்களில், மற்றும் ராகு காலம் எமகண்டம், குளிகை போன்ற நேரங்களில் திருமணம் செய்யக்கூடாது.
முடிந்தவரை கிருஷ்ணபக்ஷம் காலங்களில் மற்றும் குருட்டு நாட்களான சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் முகூர்த்தம் குறிப்பதைத் தவிர்க்கலாம்.
அஷ்டமி, நவமி, அமாவாசை, சதுர்த்தசி திதிகளை மற்றும் கரிநாள், மரண யோகம் இவற்றையெல்லாம் தவிர்க்கலாம்.
தீதுறு நட்சத்திரம் (பரணி, கார்த்திகை,திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம்), உடைபட்ட நட்சத்திரம் முகூர்த்த நாட்களைத் தவிர்க்க வேண்டும்.
சனீஸ்வரன் பிடியில் இருக்கும்பொழுது திருமணம் செய்யக்கூடாது என்று சிலர் கூறுவர். ஆனால் ஜாதகரீதியாக சனியினுடைய தசையோ புத்தியோ, கோச்சார சனி வரும் காலத்தில் திருமணம் கட்டாயம் நடைபெறும் என்பது நிதர்சனமான உண்மை, சனி என்பவர் திருமணத்தை முடித்து கொடுக்கும் கர்மகாரகன் ஆவர்.
இருவரது ராசிஃ லக்னமும் ஒருக்கொருவர் 6,8,12ல் மறையக்கூடாது. களத்திரகாரன் சுக்கிரன் தேவ குரு அஸ்தமனம் ஆகக்கூடாது.
ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்கள் மற்றும் சில மாதங்கள் மலமாதம் வரும் அக்காலங்களைத் திருமண முகூர்த்தம் குறிக்கக்கூடாது.