Home Spiritual அங்காளம்மனுக்கு 3 அமாவாசை விரதம் இருந்தால் நடக்கும் அதிசயங்கள்….

அங்காளம்மனுக்கு 3 அமாவாசை விரதம் இருந்தால் நடக்கும் அதிசயங்கள்….

0
  • அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் தான் அமாவாசை. மேலும் பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.
  • அமாவாசையில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி வேண்டியது நிறைவேறும்.
  • கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும்.
  • ஆன்ம பிணிகளாக பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம் போன்றவை விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரமஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.
  • ஒரு எலுமிச்சை பழத்தை நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருஷ்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம்.
  • பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர். அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், தோஷங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாகும்.