Monday, May 20, 2024

மாநகராட்சி சுகாதார துறையும் மற்றும் டான்சி நகர் நலவாழ்வு சங்கமமும் இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சென்னை வேளச்சேரியில் 2.12.22 அன்று காலை 8.00 மணியளவில் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார துறையும் மற்றும் டான்சி நகர் நலவாழ்வு சங்கமமும் இணைந்து மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, போன்ற நோய்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் பேரணியும் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நலசங்கம் சார்பாக 1000 விழிப்புணர்வு துண்டுப்பிரசுங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வீடுகளை சுற்றியும், சுற்றுபுறங்களை சுற்றியும் தேங்காய் மட்டை, டையர், தேவையற்ற பாத்திரங்கள், சிறியவகை கப், தேங்காய் ஓடுகள் போன்ற பொருள்களில் மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டி பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில். Dr. N. கோமதி சுகாதார அதிகாரி மண்டலம் 13, திரு.P. மணிமாறன் மாமன்ற உறுப்பினர் வார்டு 177, சி. வ. பொற்கொடி மூத்த பூச்சியியல் நிபுணர், திரு. K. முருகேசன் சுகாதார அதிகாரி வேளச்சேரி பகுதி , திரு. A .சுப்பரமணி சுகாதாரா ஆய்வாளர் வார்டு 177, புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி. மரியஜோதி, சுகாதார துறை பணியாளர்கள், புனித அந்தோனியார் பள்ளி மாணவிகள் மாமன்ற உறுப்பினர் அவர்களின் PA திரு.C. V. இளங்கோ மற்றும் கழக தோழர்கள். E. ரவிச்சந்திரன், R. பவித்தரம், N. மணிமாறன். சங்கத்தின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். பேரணியை மாமன்ற உறுப்பினர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள், Dr. N.கோமதி சுகாதார அதிகாரி மண்டலம் 13, அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு நோயின் விளைவுகளை பற்றி விளக்கி பாதுகாப்புடன் இருக்க மழைநீர் வீட்டில் தேங்காமல் சுற்றுபுரத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டி அறிவுரை வழங்கினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Latest article