Monday, May 20, 2024

தேங்காய் பர்பி

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
தண்ணீர் – 1/4 கப்
நறுக்கிய முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

  • ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு தட்டில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் வாணலை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும்.
  • சர்க்கரை நன்கு கரைந்து, ஓரளவு கெட்டியாக வரும் போது, அதில் துருவிய தேங்காயை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
  • கிளறிவிடும் போது, நுரைக்க ஆரம்பிக்கும் அப்போது முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து 3-5 நிமிடம் கிளறவும். ஓரளவு கெட்டியாகும் போது அடுப்பை அணைத்து, தட்டில் அக்கலவையைக் கொட்டி பரப்பி, கத்தியால் துண்டுகளாக்கினால், சுவையான தேங்காய் பர்பி ரெடி.

Latest article