Monday, May 20, 2024

தீபாவளி ஸ்பெஷல் கோதுமை அல்வா..!

தேவையான பொருட்கள்:


கோதுமை மாவு – 1/4 கப்
சர்க்கரை – 1/2 கப்
தண்ணீர் – 1/2 கப் + 1/4 கப்
நெய் – 1/4 கப் + 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
பாதாம் – 4 (நறுக்கியது)

செய்முறை:

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1ஃ4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
  • பின் அதில் 1ஃ2 கப் + 1ஃ4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும்.
  • மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  • சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி தூவி கிளறி, இறுதியில் பாதாமை தூவி இறக்கினால், சுவையான கோதுமை அல்வா ரெடி.

Latest article