Friday, May 3, 2024

சொர்க்கம் செல்லும் புண்ணியத்தை அளிக்கும் அபரா ஏகாதசி விரதம்!

  • வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த அபரா ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த அபரா ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது என வைணவ பிரிவு பெரியோர்கள் கூறுகின்றனர். முற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச்சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
  • இந்த அபரா ஏகாதசி தினத்திற்கு முன்தினம் இரவு வெறும் தரையில் படுத்துறங்க வேண்டும். அபரா ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் பாதாம் கீர் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம், பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.
  • அபரா ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் பிரம்ம ஹத்தி தோஷம், பைசாசப் பிறவி, பிறரை நிந்தனை செய்தல் போன்றவற்றால் விளையும் பாவங்கள் நீங்குகிறது. சத்திரிய தர்மத்திற்கு விரோதமாக, போர் புரியாமல் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடும் சத்திரியர் நரகத்திற்கு செல்வர் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் சத்திரியர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலையும், சொர்க்கம் செல்லும் புண்ணியமும் அளிக்கும் சக்தி பெற்றதாக இருக்கிறது.

Latest article