Saturday, May 18, 2024

சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற பவித்ரோத்ஸவம் விழா…

நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் பவித்ரோத்ஸவம் கடைசிநாள் அன்று பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது பக்தர்கள் அனைவருக்கும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏம்பெருமானுக்குத் திருவாராதனம் ஸமர்பிக்கப்படும் போதும் மற்றைய உத்ஸவங்களிலும் மந்த்ர லோபம் (குறைவு) ஏற்படக்கூடும். ஆதனால் எம்பெருமானுடைய ஸாந்நித்யம் குறைய வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஏற்படும் குறைகளைப் போக்குவதற்காகப் பவித்ரோத்ஸவம் கொண்டாடப்படுகிறது. பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். கோயிலுக்குப் பலதரப்பட்ட மக்களும் வருவார்கள். துிருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப்“பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது.

Latest article