Friday, May 3, 2024

கண் திருஷ்டி எதிரி தொல்லை நீங்க ஏற்ற வேண்டிய தீபம்

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே    கண்  திருஷ்டி  கழிப்பதில் அதிக   கவனத்தை   செலுத்தி    வந்தார்கள்.   இதுற்கு  காரணம் மற்றவர்களுடைய கண் திருஷ்டியானது தீய சக்திகளின் தாக்கத்தை விட     வெகு விரைவாக வேலை செய்து     நம்மை அழித்து விடும்.   

இப்பேற்பட்ட கண் திருஷ்டியில் இருந்து நம்மை காத்துக் கொள்வதுடன், நம்மை  சுற்றியுள்ள  எதிரிகள்   தீய சக்திகள் இவற்றின் தாக்குதலில்   இருந்து  வெளியேற  எளிமையான   ஒரு தீப    பரிகார  முறையை  தான்       ஆன்மீகம்     குறித்த     இந்த         பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க தீபம்
பொதுவாக நம் முன்னோர்கள் காலத்திலிருந்து சொல்லி வைத்த பழமையான ஒரு பழமொழி தான் கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்பது. கல்லடியால் ஏற்பட்ட காயம் கூட விரைவில் ஆறி விடும். இந்த கண்ணாடியால் ஒருவர் வாழ்க்கையில் அடிபட்டு விட்டால் நிச்சயம் அவர்களால் அந்த அடியிலிருந்து அவ்வளவு எளிதில் மீண்டு வர முடியாது.

நாம் ஒரு காசு சம்பாதிக்க அத்தனை  பாடுபட்டு  இருப்போம் எத்தனையோ அவமானங்களையும் துன்பங்களையும் சந்தித்து முன்னேறி இருப்போம். இதை பார்த்தவர்களுக்கு நாம்    அனுபவித்த  வலி   வேதனை எதுவும்    தெரியாது.   இவுர்கள்   நன்றாக  இருக்கிறார்களே   என்கிற  பொறாமை பட மட்டும் தான் தெரியும். இந்த    எண்ணமும்   பார்வையுமே நம்மை   ஒன்றும் இல்லாமல் செய்து விடும்.

அதுமட்டுமின்றி இன்னும் சிலர் இதை  விட   ஒரு  படி மேலே  சென்று நம்மை  முன்னேற   விடாமல்   செய்ய நேரடியாகவோ, மறைமுகமாகவோ சிலர் தீய      செயல்களை   செய்வார்கள். இபு;படி   அனைத்து    விதமான துன்பங்களிலிருந்தும் நம்மை காக்க      ஒருவர்   உண்டெனில்   அவர் கால பைரவர் தான். 

இந்த   கால  பைரவரை  நாம் தினந்தோறும் வழிபடும் போது இது போன்ற தீய சக்திகளில் இருந்தும் தீயவர்களிடம்     என்றும்   நம்மை காப்பார்.    அதற்கு       இந்த     தீபத்தை   தினந்தோறும்   வீட்டு  நிலை வாசலின்        வெளிப்புறம்         மாலை   6     மணிக்கு    மேல்  ஏற்ற   வேண்டும். இந்த  தீபத்தை  ஏற்ற  இரண்டு        அகல் விளக்கை எடுத்துக்   கொண்டு   அதில்    நல்லெண்ணெய்   ஊற்றி   பஞ்சுத்    திரி  போட்டு  தீபம்  ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் கிழக்கு அல்லது   வடக்கு    பார்த்தவாறு   எரிய         வேண்டும்.  ஆப்படி  தீபம்  ஏற்றும்    போது ஓம்     பைரவாய   நமக என்ற           இந்த  ஒரு  மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள். இந்த ஒரு தீபம் போதும் உங்கள்  வீட்டிற்குள்   எந்த  தீய சக்தியனயோ, தீயவர்களையோ ஏன் தீய எண்ணங்களை கூட உங்களை வந்து சேராமல் காக்கும்.

அத்தனை வல்லமை கொண்ட பைரவரை தினந்தோறும் நினைத்து    இந்த   தீப வழிபாட்டை  செய்யும்          போது   நிச்சயம்  நாம்  நிம்மதியாக   வாழலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கையுடன் இந்த தீபத்தை   ஏற்றி  வைரவரின் அனுகிரகத்தோடு நிம்மதியாக வாழுங்கள்.

Latest article