Saturday, May 18, 2024

உருளைக்கிழங்கு பஜ்ஜி

தேவையானவை :

உருளைக்கிழங்கு – 3
கடலை மாவு – 1 1/2 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

  • முதலில் உருளைக்கிழங்கின் தோலை சீவி பின்னர், உப்பு கலந்த நீரில் போட்டு, கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதனை வட்டமாக நறுக்கி பின்பு ஒரு பொளலில் கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, பெருங்காயத் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை ஒவ்வொரு துண்டாக எடுத்து, கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி ரெடி.

Latest article