Monday, May 20, 2024

நார்த்தங்காய் வெல்ல பச்சடி

தேவையான பொருள்கள்:
நார்த்தங்காய் – 2
வெல்லம் – 100 கிராம்
பொடியாக நறுக்கிய இஞ்சி – அரை கப்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – 4
புளி – 1 நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் – 1 சின்ன குழிகரண்டி அளவு
கருவேப்பிலை, கடுகு, வெந்தயம் – தாளிக்க
மல்லிதூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – 5 தேக்கரண்டி

செய்முறை:

  • நார்த்தங்காயை சிறியதாக வெட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் குக்கர் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு பின்பு பச்சை மிளகாய், இஞ்சி போட்டு 2 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும்.
  • அதன் பின் வெட்டி வைத்துள்ள காயை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
  • பின் அதனுடன் அனைத்து தூள்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி அதனுடன் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
  • பின்பு வெல்லத்தை பொடித்து போட்டு 20 நிமிடம் நன்றாக கொதித்து கெட்டியான பின் இறக்கவும்.
  • சுவையான நார்த்தங்காய் வெல்ல பச்சடி ரெடி. ஒரு வாரம் வரை கெட்டு போகாமல் இருக்கும்.

Latest article