Home Recipe நாட்டு கோழி உப்பு வறுவல்

நாட்டு கோழி உப்பு வறுவல்

0

தேவையான பொருட்கள்:

நாட்டு கோழி -1/ 2கிலோ
சாம்பார் வெங்காயம் – 20 (நீளவாக்கில் நறுக்கியது)
இஞ்சி -1/ 2 அங்குல துண்டு (தட்டியது)
பூண்டு பற்கள் 20 (தட்டியது)
தக்காளி – 1
வர மிளகாய் – 10
மஞ்சள் தூள் -1/ 2 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
சோம்பு -1 தேக்கரண்டி
என்ணெய் -2 மேசைக்கரண்டி
கருவேப்பிலை -1 கொத்து
கொத்தமல்லி -1 மேசைக்கரண்டி

செய்முறை:

கோழி கறியை நடுத்தரமான துண்டுகளாக வெட்டிகொள்ளவும். நன்றாக சுத்தம் செய்து கழுவி தண்ணீர் முழுவதையும் வடிக்கவும்.
சிக்கனில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து மற்றவற்றை தயார் செய்யும் வரை ஊறவிடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, சோம்பு சேர்த்து, கருவேப்பிலை போடவும்.
வர மிளகாயை கிள்ளி சேர்க்கவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து, தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
நறுக்கிய் தக்காளி சேர்த்து நன்றாக மசியும்வரை வதக்கவும்.
சிக்கன் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10-15 நிமிடங்கள் வேகவிடவும்.
சிக்கன் நன்றாக வெந்தபின்னர் மூடியை எடுத்துவிட்டு தீயை அதிகப்படுத்தி சிக்கனில் உள்ள தண்ணீர் வற்றி பிரவுன் கலர் மாறும் வரை நன்றாக வறுக்கவும்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
அருமையான செட்டிநாடு நாட்டுகோழி உப்பு வறுவல் தயார்.