தேவையான பொருட்கள்:
ரவை – 1/2 கப்
கோதுமை மாவு – 1/4 கப்
மைதா – 1/4 கப்
சர்க்கரை – 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பௌலில் ரவையைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
- ஒரு மணிநேரம் ஆன பின்னர் அதில் கோதுமை மாவு, மைதா மற்றும் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி ஓரளவு கெட்டியான மாவு போல், கட்டிகள் இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- பின்பு அதில் தேங்காய், ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவேண்டும்.
- எண்ணெய் சூடானதும், ஒரு சிறிய குழிக் கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- சுவையான ரவா அப்பம் ரெடி.