Home Recipe காந்தாரி சிக்கன் குழம்பு

காந்தாரி சிக்கன் குழம்பு

0

தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
தேங்காய் எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3/4 கப் (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
காந்தாரி மிளகாய் – 10 (தட்டிக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் , மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் , கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது), சுடுநீர் – 1/2 கப்
முந்திரி – 6-8 (நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்)
கெட்டியான தேங்காய் பால் – 1/4 கப்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

   முதலில் ஒரு வாணலியிள் , 3-4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
   பின் அதில் சின்ன வெங்காயம், 2-3 காந்தாரி மிளகாய், சிறிது உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.  
   பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், நசுக்கிய காந்தாரி மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து 1-2 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
   பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி விட வேண்டும். 
  பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து 4-5 நிமிடம் நன்கு பிரட்டி, சுடுநீரை ஊற்றி கிளறி, சிக்கனை குறைவான தீயில் 25-30 நிமிடம் வேக வைக்க வேண்டும்.   
   சிக்கன் நன்கு வெந்தது, கரம் மசாலா, முந்திரி பேஸ்ட் சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
அடுத்து கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி, மேலே சிறிது கறிவேப்பிலையைத் தூவி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான காந்தாரி சிக்கன் குழம்பு தயார்.