தேவையானவை:
மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு- 4 . (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்)
கடலை மாவு- 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
உலர் தேங்காய்த் துரவல்- 1 டேபிள் ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால்- 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
மசித்த உருளைக்கிழங்குடன் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உலர் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
அதனுடன் பால் சேர்த்து நன்கு கலக்கவும் (பேஸ்ட் போல வரும் வரை பால் சேர்த்துக் கலக்கவும்).
இந்தக் கலவையை பைப்பிங் பேகில் நிரப்பி, நுனியை கட் செய்யவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நிரப்பிய கலவையை ஸ்பைரல் (சுருள்வட்டம்) போல பிழிந்து, வேகவைத்து எடுக்கவும்.
சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.