Home Recipe இத்தாலியன் பாஸ்தா

இத்தாலியன் பாஸ்தா

0

தேவையான பொருட்கள்:

ஒரு கப் பாஸ்தா
200 கிராம் தக்காளி
ஒன்று வெங்காயம்
2 பல் பூண்டு
கால் தேக்கரண்டி தேன்
தேவைக்கு உப்பு
அரை தேக்கரண்டி மிளகு தூள்
3 சிவப்பு பழுத்த மிளகாய்
4 பேசில் இலை
2 சிட்டிகை ஓரிகனோ
4 தேக்கரண்டி மொசரேல்லா சீஸ் துருவியது
கால் தேக்கரண்டி ஆலிவ் ஆயில்
2 சிட்டிகை ரோஸ்மரி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அதில் பாஸ்தாவைக் போட்டு பதமாக வேக வைக்கவும் .
ஒட்டும் தன்மையை தவிர்க்க சிறிது எண்ணெய் சேர்க்கவும்.
வெந்ததும் குளிர்ச்சியான தண்ணீரில் வடித்து எடுக்கவும்.
தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம், பூண்டு, மிளகாய், அரைத்த தக்காளி. தேன், மிளகு தூள், ஓரிகனோ , ரோஸ்மரி மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிம்மில் வைக்கவும்.
அதனுடன் வேக வைத்து ஆற வைத்த பாஸ்தாவைச் சேர்த்துக் கலக்கவும்.
பாஸ்தாவை பரிமாறும் தட்டுகளில் போட்டு சீஸ் துருவி சூடாக பரிமாறவும்.