Home City வேளச்சேரி – மவுன்ட் பாலம் அழகுபடுத்தும் பணி துவக்கம்…

வேளச்சேரி – மவுன்ட் பாலம் அழகுபடுத்தும் பணி துவக்கம்…

0

வேளச்சேரி – மவுன்ட் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியை, அழகு படுத்தும் பணி மாநகராட்சி சார்பில் துவங்கப்பட்டு உள்ளது. வேளச்சேரி – மவுன்ட் உள்வட்ட சாலையின் மையப் பகுதியில், மேம்பால ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து, மேம்பால ரயில் திட்டம், பரங்கிமலை ரயில் நிலையத்துடன் இணைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக பல தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேம்பாலத்தின் சில இடங்களில் புதர்மண்டி காட்சியளிக்கிறது. அதன் தூண்களில் சுவரொட்டி ஒட்டி நாசப்படுத்தப்படுகிறது. வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சுவரொட்டி ஒட்டப்படுகிறது.

இதன் எதிரொலியாக, சென்னை மாநகராட்சியின் அடையாறு, பெருங்குடி மண்டலம் சார்பில், மேம்பாலத்தின் கீழ் பகுதி சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வேளச்சேரி – மவுன்ட் மேம்பாலத்தின் கீழ், வேளச்சேரியிலிருந்து உள்ளகரம் வரை அழகுபடுத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக தூண்கள் இருக்கும் பகுதி சுத்தப்படுத்தப்பட்டு, பெருங்குடி குப்பை கிடங்கில் தயாராகும் மண் உரம் கொட்டப்படுகிறது. பின்னர், அழகான செடிகள் நடப்படும். மேலும், மேம்பாலத்தின் கீழ் தடுப்பு அமைத்து, முழுமையாக அழகுபடுத்தப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.