Home City சென்னையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் குடியிருப்பு நலச்சங்கங்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…

சென்னையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் குடியிருப்பு நலச்சங்கங்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…

0

ஒரு பெரிய பயணம் ஒரு சிறிய விதையில் தொடங்குகிறது. ஆனால் பசுமை வேளச்சேரி பயணம் ஒரு விதையில் மட்டுமல்ல, 100 மரக்கன்றுகளுடன் தொடங்கியது.

பூமி தினமான ஏப்ரல் 22 அன்று, பசுமை வேளச்சேரி ஒரு குழுவாக இன்று வரை 4000 மரக்கன்றுகளை நட்டுள்ளது. இன்னும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் தோட்டத்தை நோக்கி பயணம் தொடர்கிறது.

சென்னையில் 13வது மண்டலத்துக்கான விருதை பசுமை வேளச்சேரி அணி பெற்றது. சென்னையில் பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு சிறப்பாக பராமரித்து வரும் குடியிருப்பு நலச்சங்கங்கள் / தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை பாராட்டி மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் (25.10.2021) திங்கள் கிழமை அன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர்கள் திரு. எம். எஸ் . பிரசாந்த், டாக்டர் எஸ். மனிஷ், திருமதி டி.சிளேகா, திரு. சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், திருமதி. ஷரண்யா அரி, மற்றும் திரு. எம். சிவகுரு பிரபாகரன் அவர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் சென்னையில் 13வது மண்டலத்துக்கான பாராட்டு சான்றிதழை பசுமை வேளச்சேரி அணிக்கு வழங்கி சிறப்பித்தனர்.