Home Recipe கைமா இட்லி!

கைமா இட்லி!

0

தேவையான பொருட்கள்:

இட்லி – 5
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பெரிய தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை பட்டாணி – 1/4 கப் (வேக வைத்தது)
குடைமிளகாய் – 1/2 (பொடியாக நறுக்கியது)
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் இட்லியை துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக டோஸ்ட் செய்து தனியாக வைக்கவும்.
  • பின் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
  • பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பைத் தூவி நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் அதில் குடைமிளகாய், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
  • அடுத்து அதில் வேக வைத்துள்ள பச்சை பட்டாணி சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின் அதில் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, இட்லித் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், சுவையான கைமா இட்லி தயார்.