Monday, December 23, 2024

GREEN VOICE GLOBAL (NGO) சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம்…

சென்னை Green Voice Global (NGO) அமைப்பு சார்பில் செப்டம்பர் 16,2023 அன்று காலை 7.00 மணிக்கு பெசன்ட் நகர் எலியாட்ஸ் பீச் சாலையில் புவி வெப்ப மயமாதல், பருவ நிலை மாற்றம் மற்றும் உலக அமைதிக்கான ஒரு விழிப்புணர்வு நடைப்பயணம் A walk for Green Peace Talk நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் டாக்டர் வி. குாமகோடி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சி தொடங்கி வைத்தார். மேலும், சென்னை வேளச்சேரி குரு நானக் கல்லூரி, பூந்தமல்லி, ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆ/ப் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் D.B.ஜெயின் கல்லூரி சேர்ந்த நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள்(NSS) கலந்து கொண்டனர். இந்நிகழ்வை C.S.வீரராகவன் நிறுவனர் ரூ தலைவர் -Green Voice Global NGO, பேராசிரியர் Dr.நெடுமாறன், குருநானக் கல்லூரி, பேராசிரியர் Dr .ஹரிஹரன் – ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆ/ப் டெக்னாலஜி, பேராசிரியர் Dr . குபேந்திரன் D.B.ஜெயின் கல்லூரி ஆகியோர் பங்கேற்றனர்.

Latest article