Monday, December 23, 2024

B. ஜெகசாஹஸ்ரீ என்பவர் “இளம் சாதனையாளர் விருது” பெற்றர்…

இந்த வாரம் நமது எக்ஸ்பிரஸ் வேளச்சேரி வழங்கிய ‘இளம் சாதனையாளர்” விருதை பெற்றவர் B. ஜெகசாஹஸ்ரீ என்ற ஐந்து வயது சிறுமி. இவர் கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், சேத்துமடை கிராமத்தைச் சேர்ந்தவர். ஜெகசாஹஸ்ரீ தற்போது தனது ஒன்றாம் வகுப்பை வேட்டைக்காரன்புதூரில் உள்ள Forest Hill Academy என்கிற பள்ளியில் படித்து வருகிறாள். பெற்றோர்கள் ராஜா(எ) பாலபூர்ணகோவிந்தராஜ், நிவேதிதா.


இவர்கள் குழந்தையின் நினைவாற்றலை கண்டு பிடித்து ஊக்குவித்தனர். சிறு வயதில் இருந்தே அவர் நன்கு பேசுவாள், மிகுந்த துணிவுடன் இருப்பாள். அனைத்தையும் கூர்ந்து கவனித்து செயல்படுவாள்.


ஜெகசாஹஸ்ரீ என்கிற பெயரின் விளக்கம்
ஜெ – ஜெகதாம்பிகை
க – கர்பரட்சாம்பிகை
சா – சாயிபாபா
ஹ – ஹயக்ரீவர்
ஸ்ரீ – ஸ்ரீனீவாசன்

மேற்கூறிய அனைத்து கடவுளின் முதல் எழுத்துகளை சேர்த்து இவளின் பெற்றோர்கள் பெயர் சூட்டினர். இதன் காரணமாக இவள் இறைவழிபாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் விளங்குகிறாள்.
நான்காம் வயதில் இவர் சங்கரா டி.வி.யில் Slogan Chanting Competition-இல் பங்கு பெற்றாள். சிறு வயதிலிருந்தே இவளுடைய சமஸ்கிருத உச்சரிப்பு மிக தெளிவாக இருந்தது. அனைத்து தெய்வீக பாடல்களை விரைவாகவும் அழகாகவும் கற்று பாடி வந்தாள்.


இக்குழந்தை படிக்கும் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளிள் பங்கு பெற்று பரிசுகளை வாங்கினார். (பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்பிவித்தல், ஆங்கில பாட்டு படித்தல் என பல போட்டிகள் …). மிகவும் ஆச்சரியமான விக்ஷயம் என்னவென்றால் இக்குழந்தையின் பேச்சாற்றல் தான் இவருக்கு வெற்றியை தேடித்தந்தது.

இக்குழந்தை நான்கு வயதில் தன் தாயின் துணையுடன் அவர் உலக சாதனை படைத்தார். ஜெகசாஹஸ்ரீயின் பெயர் ராபா புக்கில் இடம் பெற்றது. (Raaba book of world record).
Recitation – பிரிவில் அவர் 28 States and Capital, 25 திருக்குறள், 15 English Rhyme, 15 Tamil Rhyme, 5 தெய்வீக பாடல் அனைத்தையும் ஒப்பிவித்து சாதனை புரிந்தார். மேலும் இவருக்கு “Young Star” என்ற விருது சூட்டப்பட்டது. இவர் இந்த சாதனை பெற்றார் என்பதை பாராட்டி ஸ்ரீப்ரமம் என்ற புத்தகத்தில் இவர் சாதனையை வெளியிட்டனர்.


ஆனைமலை வாசவி மஹாலில் இவளுக்கு ஊக்க பரிசு அளித்து பெருமை செய்தனர்.
அவள் பலவிதமான மாறுவேடப் போட்டி, பேச்சு போட்டி, பாட்டு போட்டி, அனைத்திலும் பங்கு பெற்று தம் திறமையை காட்டி பரிசுகளை வென்றாள்.


இவர் பயிலும் பள்ளியில் ஊக்கபடுத்தும் Notice board-ல் சாதனையை வெளியிட்டனர். ஜெகசாஹஸ்ரீ சிறு வயதில் இருந்தே துணிவுடன் அனைவரையும் மதித்து, அன்புடன், இறை பண்புடன், அனைவருக்கும் உதவி செய்து கொண்டு இருப்பாள். அவர் பிறந்து வளர்ந்தது சிறு கிராமம் என்றாலும் தன் பள்ளியின் துணையுடனும், தன் தாயின் துணையுடனும் அவர் தன் திறமையை நன்கு வெளிக்காட்ட தொடங்கினார் .


ஐந்து வயது கூட நிறைவடையாமல் அவர் 3 உலக சாதனை படைத்தார். இதற்கு அவருடைய விடாமுயற்சியும், நினைத்ததை சாதிக்கவேண்டும் என்கிற எண்ணம் தான் காரணம்.
“எந்த குழந்தையும் திறமையுடன் பிறக்காது ஆனால் நாம் வளர்க்கும் வளர்ப்பில்திறமையை வெளிக் கொண்டு வரலாம் திறமை என்பது கிராமத்தையோ நகரத்தையோ சார்ந்தது இல்லை என்பதை உறுதியாக்கி காட்டினாள் இச்சிறுமி.


அவருடைய கனவு “IAS” ஆக வேண்டும் என்பது தான் அவள் சமதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும். அந்த இறைவன் துணையுடனும், பெற்றோர் துணையுடனும் அவள் கண்டிபாக IAS-ஆகி விடுவாள்.


இவர் மென்மேலும் பல சாதனைகளைப் புரிந்திடவும் அவரது விருப்பங்கள் அனைத்தும் வெற்றி பெறவும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Latest article