Monday, November 25, 2024

வேளச்சேரி கால்வாயில் விழுந்த பசு மீட்பு…

வேளச்சேரியில் சகதி நிறைந்த கால்வாயில் விழுந்து உயிருக்கு போராடிய பசுவை, தீயணைப்பு படையினர் மீட்டனர்.

வேளச்சேரி ஏரியில் இருந்து வடியும் உபரி நீர், வீராங்கால் கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது. இந்த கால்வாயில், கழிவுநீர் அதிகம் கலப்பதால், தரை பகுதியில் சகதி அதிகமாக இருக்கும். 23ஆம் தேதி செவ்வாய் அன்று காலை, வேளச்சேரி ரயில் நிலையம் அருகே, கால்வாய்க்குள் ஒரு பசு விழுந்தது. பசுவின் கால்கள் சகதியில் சிக்கியதால், வெளியேற முடியாமல் நீரில் தத்தளித்தது. ஒரு கட்டத்தில், பசு நீரில் மூழ்கும் கட்டத்திற்கு சென்றது.

இதை பர்த்த அப்பகுதி மக்கள், வேளச்சேரி தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் ஏணி, கயிறு பயன்படுத்தி, ஒரு மணி நேரம் போராடி பசுவை மீட்டு கரை சேர்த்தனர். பின்னர் லாரியில் இருந்த தண்ணீரால் பசு உடலில் இருந்த சகதியை சுத்தப்படுத்தினர்.

Latest article