தேவையானவை:
பாசிப் பருப்பு – 3/4 கப்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 1
பெருங்காயம் – 1 சிட்டிகை
கடுகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
துருவிய தேங்காய் – 1/2 கப்
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
எலுமிச்சை – 1/2 பழம்
செய்முறை:
- பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும், கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- பின்பு பாசிப்பருப்பில் உள்ள நீரை முழுவதுமாக வடிகட்டி அதில் சேர்க்க வேண்டும். மேலும் அதில் கொத்தமல்லி இலை, அரைத்த தேங்காய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.
- சுவையான பாசிப்பயறு சாலட் ரெடி.