Aspiring Foundation நடத்திய 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஐவர் கால்பந்தாட்ட போட்டி…

0
265

Aspiring Foundation நடத்திய 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஐவர் கால்பந்தாட்ட போட்டி, சென்னை வியாசர்பாடியில் உள்ள நவீன செயற்கை தரை மற்றும் மின்னொளி கால்பந்தாட்ட திடலில் 05-09-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. 12 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில், துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி A அணி இரண்டாம் இடத்தையும், B அணி நான்காம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தன. இப்போட்டியில் நெய்வேலி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பெண்கள் அணி முதலிடம் பிடித்தது. துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி ச.அனிதா இப்போட்டியின் சிறந்த கோல் கீப்பருக்கான விருதைப் பெற்றார். துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பல முன்னணி அணிகளை வீழ்த்தி பாராட்டுகளை பெற்றனர்.