உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மறந்து கூட வடக்கு பார்த்து அமர்ந்து சாப்பிடாதீர்கள். தெற்கு திசை பார்த்து சாப்பிட்டால் நோய் எட்டி கூட பார்க்காது என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. நோய்கள் வராமல் தடுக்க நாம் நம்முடைய வீட்டில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதை பார்க்கலாம். உணவே மருந்து என்று நம்முடைய முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். ஆரோக்கியமான உணவை சமைக்கும் கிச்சன் நம்முடைய வீட்டில் சரியான வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டிருந்தால் அந்த வீட்டில் இல்லத்தரசிகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஒரு வீட்டில் இல்லத்தரசி ஆரோக்கியமாக இருந்தாலே அந்த வீட்டில் உள்ள அனைவருமே ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். நம்முடைய வீட்டில் கிச்சன் எப்படி தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதோ அதே போல எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சுாப்பிடும் இடம் அமைதியானதாக நிம்மதி தரக்கூடியதாக இருக்க வேண்டும். சிலரது வீடுகளில் சாப்பிடும் இடத்தில்தான் அதிக சண்டை வரும். சாப்பாடு தட்டு பறக்கும். சுிலர் சாப்பிடாமல் கோபித்துக்கொண்டு செல்வார்கள். எனவே நாம் சரியான இடத்தில் அமர்ந்து சரியான திசையை நோக்கி சாப்பிட வேண்டும். டைனிங் டேபிள் போட இடமில்லாவிட்டாலும் சரியான திசையைப் பார்த்து அமர்ந்து சாப்பிட வேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து நாம் உணவை உண்பதால், உணவு நன்றாக ஜீரணமாகி நீண்ட காலம் வாழ்வீர்கள் என்றும், இதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல நம்முடைய சமையல் அறையையும் சாப்பிடும் அறையையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். சுத்தமாக இருக்கும் வீட்டில் ஆரோக்கியம் நிறைந்திருக்கும். ஆரோக்கியமான வீட்டில் அன்னை மகாலட்சுமி குடியேறுவாள். நம்முடைய வீட்டிற்குள் சூரிய ஒளி பட வேண்டும். கிழக்கு திசையில் இருந்து சூரிய ஒளி வீட்டிற்குள் வந்தால் அந்த வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள். சமையல் அறைக்குள் சூரிய ஒளி தாராளமாக வந்து சென்றால் அந்த வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள். நாம் பூஜை செய்வது வடக்கு பார்த்து செய்வது நல்லது என்று சொல்வார்கள். அதே போல சாப்பிடும் போது தெற்கு பார்த்து சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். எனவேதான் பூஜை வடக்கு போஜனம் தெற்கு என்று சொல்லி வைத்துள்ளனர். வடக்கு திசை பார்த்து நாம் உணவு மட்டுமல்ல மருந்து கூட சாப்பிடக்கூடாது என்று சொல்லி வைத்துள்ளனர். நாம் உண்ணும் உணவு நமக்கு சப்த தாதுக்களாக மாறி நம்முடைய உடலில் சேர வேண்டும். பூஜை அறையில் சாமி படங்களை கிழக்கு அல்லது வடக்குப் பார்த்து அமைத்து, நீங்கள் வடக்கு அல்லது கிழக்குப் பார்த்து இருந்து வழிபாடு செய்யுங்கள். சாப்பிடும் போது தெற்கு திசை நோக்கி சாப்பிட்டால் புகழும் செல்வாக்கும் கூடும் ஆரோக்கியம் சிறக்கும். மேற்கு திசை நோக்கி சாப்பிட்டால் செல்வம் வளரும்.