Friday, November 22, 2024

வாழ்க்கையில் விஸ்வரூப வெற்றி பெற நிலை வாசல் பரிகாரம்

ஒரு வீடு என எடுத்துக் கொண்டால் அதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பது நிலைவாசல் தான். வீட்டில் ராஜ வாசல் என்று அழைப்பதும் இந்த நிலை வாசலை தான். வீட்டிற்குள் தெய்வங்கள் முதல் மனிதர்கள் வரை அனைவரும் தாண்டி செல்வதும் நிலை வாசல் வழியாகத் தான். இந்த நிலை வாசலை நாம் சரியான முறையில் பூஜை செய்து வழிபட்டு வந்தாலே நம் வாழ்வில் ஏற்பட போகும் பல சிக்கல்களில் இருந்து விடுபடலாம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவிலும் நிலை வாசலை எப்படி நாம் பூஜித்து   வழிபட்டால்  நம்முடைய வாழ்க்கையில் வெற்றி பெற்று அதிர்ஷ்ட த்தை நாம் வரவழைத்துக் கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நிலைவாசல் வழிபாடு
நிலை வாசலில் விரிசல் ஏற்பட்டிருப்பது உடைந்து இருப்பது அல்லது நிலை வாசல் கதவை சாற்றும் போது சத்தம் கேட்பது இவற்றை எல்லாம் முதலில் சரி செய்து விட வேண்டும். இவை தான் நம் குடும்பத்திற்கு துன்பம் வருவதற்கு முதல் காரணம். இந்த நிலை வாசலில் தான் நிலைவாசல் தேவதை எப்போதும் வீற்றிருந்து நம் குடும்பத்தை காப்பார். அது மட்டும் இன்றி நம்முடைய குலதெய்வமே நிலை வாசலில் இருந்து தான் நம்மை காக்கும் என்பதும் ஐதீகம். ஆகையால் நிலைவாசலில் எந்த ஒரு விண்ணமும் இல்லாமல் இருப்பது முக்கியம்.

வெள்ளிக்கிழமைகளில்     இந்த நிலை வாசல் பரிகாரத்தை செய்வது மிகவும்    உசித்தம்.   அதிலும் வெள்ளிக்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள்ளாக இதை செய்யும் பொழுது      சுக்கிரனுடைய அனுகிரகத்தையும் சேர்த்து பெறலாம். முதலில் நிலை வாசலை நல்ல சுத்தமான தண்ணீர் கொண்டு துடைத்து விடுங்கள். அதன் பிறகு பன்னீரை கொண்டு துடைக்க வேண்டும். அடுத்ததாக மஞ்சள் சந்தனம்    இரண்டையும்  ஒன்றாக குழைத்து (சந்தனம் கேது பகவான் கூறியது கேது கிரகமே பிரம்மாண்டத்தை குறிப்பது தான்) நிலை வாசலில் பூசி அதில் தாழம்பு குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் நல்ல நறுமணத்தை தரக் கூடியது. இத்துடன் 11 மாவிலை எடுத்து அதில் சந்தனம் மஞ்சள் கலந்த பொட்டை வைத்து குங்குமமும் வைத்து வாசலில் கட்டி விடுங்கள்.

அதன் பிறகு இரண்டு அகல் தீபத்தை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு ஒவ்வொரு விளக்கிலும் ஆறு டைமண்ட் கற்கண்டை சேர்த்துக் தீபம் ஏற்றுங்கள். ஆறு என்றால் அது சுக்கிரனை குறிக்கும்    அத்துடன்   வாசலில்    அண்ணாச்சி    பழ நறுமணத்துடன் இருக்கும் ஊதுபத்தியை ஏற்றி வையுங்கள். இதனால் மகாலட்சுமி இதன் பிறகு நிலை வாசலுக்கு கற்பூர தீபாராதனை காட்டி நிலை வாசலை சிரத்தையுடன் பூஜை செய்து கொள்ளுங்கள்.

இந்த   பூஜை  முடித்த  பிறகு மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஏற்றி நீங்கள் எப்பொழுதும் போல் வெள்ளிக்கிழமை பூஜையை செய்து கொள்ளலாம். இந்த நிலை வாசல் பூஜையில்   நாம்  சுக்கிரன்,  கேது, மகாலட்சுமி தாயார், குலதெய்வம், நிலை வாசல் தெய்வம் என அனைவரையும் வழிபட்டு      அனைவரின் ஆசிர்வாதத்தையும் முழுமையாக பெற்று விடலாம்.

இதை வெள்ளிக்கிழமை தோறும் தொடர்ந்து செய்து வரும் போது நாம் தொடங்கும் காரியம் அனைத்தும் வெற்றி தான். இத்தகைய பூஜை செய்த பிறகு நாம் நிலை வாசல் படி தாண்டி போகும் போது நமக்கான அதிர்ஷ்டம் எப்போதும் நம்மை தொடர்ந்து வரும. நேர்மறை எண்ணங்கள் மட்டுமே நம்மை தொடர்ந்து தீயவை எதுவும் நம்மை நெருங்காது. இந்த நிலைவாசல் பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெறலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Latest article