நமது வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 2ஆம் தேதி அன்று ஆண்டாள் ரங்கமன்னார் கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. கோவில் சொர்கவாசல் காலை 5.45 மணிக்கு திறக்கப்பட்டது. அதன் பின் பெருமாள் தாயார் இணைந்து சேவை புரிந்தார்.
23ஆம் தேதி வெள்ளிகிழமை அன்று முதல் பகல் பத்து ஆரம்பம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் ராமர் காட்சி தந்தார்.முதல் நாள் 23ஆம் தேதி அன்று முத்து நேர் கீரிடம் சேவையிலும், 2ஆம் நாள் 24ஆம் தேதி அன்று சாயக் கொண்டை சேவையிலும், 3ஆம் நாள் 25ஆம் தேதி அன்று ஆண்டாள் கொண்டை சேவையிலும், 4ஆம் நாள் 26ஆம் தேதி அன்று தொப்பாரம் கீரிடம் சேவையிலும், 5ஆம் நாள் 27ஆம் தேதி அன்று பாண்டியன் கொண்டை, அரைச் சிவந்த ஆடை, நீல மேனி, முத்தாமமும் முடிவில்லதோர் எழில் என சேவை புரிந்தார். 6ஆம் நாள் 28ஆம் தேதி அன்று வைரமுடி சேவையிலும், 7ஆம் நாள் 29ஆம் தேதி அன்று விசிறிப் பாகை சேவையிலும், 8ஆம் நாள் 30ஆம் தேதி அன்றுகிருஷ்ணர் கொண்டைசேவையிலும், 9ஆம் நாள் 31ஆம் தேதி அன்று சௌரிக் கொண்டை சேவையிலும்,
10ஆம் நாள் 1ஆம் தேதி அன்று நாச்சியார் திருக்கோலம், மோகினி அலங்காரத்துடன் சேவை புரிந்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.