Friday, November 22, 2024

வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா…

இறைவன் ஜோதி வடிவத்தில் நமக்கு அருள்கிறான் என்பதை உணர்த்துவதுதான் விளக்கு வழிபாடு. ஒளி வடிவத்தில் இருக்கும் இறைவனை வழிபட்டால் உள்ளத்திலும் இல்லத்திலும் அமைதி பிறக்கும் நேர்மறை சக்தி அதிகரிக்கும்.

06/12/2022 அன்று செவ்வாய்க்கிழமை திருக்கார்த்திகை தீபத்திருநாள். நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் சர்வாணைய தீபத்தை முன்னிட்டு சிவன் சன்னதியில் திருக்கார்த்திகை வழிபாடுகள் நடைபெற்றன. தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நன்னாளில், மாலையில் அந்தி சாயும் நேரத்தில், உங்கள் வீட்டில், எவ்வளவு விளக்குகளை ஏற்றி வைக்கமுடியுமோ, அத்தனை விளக்குகளையும் ஏற்றி வைத்து இறைவனை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைக்கும்.

சொக்கப்பனை என்றால் பனை மர ஓலைகளை கூம்பு போன்று அமைத்து கார்த்திகை தீபத்தன்று சிவாலயக் கோபுர உச்சியில் தீபம் ஏற்றி, பஞ்ச மூர்த்திகளுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது . மலைக்கோவில் அல்லாத இடங்களிலும் கோவிலின் வெளியே சொக்கப்பனை அமைத்திருப்பார்கள் அங்கே சொக்கப்பனை கொளுத்துவார்கள் எரியும் அக்னியை கடவுளாக நினைத்து வழங்குவார்கள். இது தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நடைமுறையில் இருக்கும் விசயமாகும். இதில் பக்தர்கள் அனைவருக்கும் கலந்துகொண்ட இறைவன் அருள் பெற்றனர்.

Latest article