Sunday, November 24, 2024

சிக்கன் மலாய் டிக்கா

தேவையான பொருட்கள்:
500 கிராம் போன்லெஸ் சிக்கன்
¾ கெட்டி தயிர்
½ கப் ஃப்ரெஷ் க்ரீம்
1 மேஜைக்கரண்டி சோள மாவு
8 வழ 10 பாதாம் பருப்பு
3 பல் பூண்டு
1 துண்டு இஞ்சி
1 எலுமிச்சம் பழம்
1 பச்சை மிளகாய்
2 மேஜைக்கரண்டி கரம் மசாலா
2 மேஜைக்கரண்டி சாட் மசாலா
1 மேஜைக்கரண்டி கசூரி மேத்தி
¼ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்
¼ மேஜைக்கரண்டி வெள்ளை மிளகு தூள்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு நெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு தட்டில் வைத்து பின்பு இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் பாதாமை போட்டு சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை அதை ஊற விடவும்.
அடுத்து நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை ஒரு bowl ல் போட்டு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 10 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும். பின்பு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் பாதாமை போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
பிறகு அதில் பச்சை மிளகாயை நறுக்கி போட்டு அதையும் நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பாதாம் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், தயிர், ஃப்ரெஷ் கிரீம், கரம் மசாலா, கசூரி மேத்தி, வெள்ளை மிளகு தூள், நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி, மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
அடுத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை போட்டு அது நன்கு மசாலாவோடு சேருமாறு அதை கிளறி விட்டு சுமார் 5 லிருந்து 10 நிமிடம் வரை ஊற விடவும்.
10 நிமிடத்திற்கு பிறகு ஒரு iron skewer ரை எடுத்து அதில் இந்த சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக சொருகி வைத்து கொள்ளவும்.
பின்பு இவ்வாறு மற்ற iron skewer யின் அளவிற்கேற்ப சிக்கன் துண்டுகளை சொருகி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
Iron skewer க்கு பதிலாக wooden skewer ரை பயன்படுத்துவதாக இருந்தால் அதை பயன்படுத்துவதற்கு முன் சுமார் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் சிக்கன் துண்டுகளை சொருகி வைத்திருக்கும் iron skewer ரை எடுத்து pan ன அளவிற்கேற்ப அதில் வைத்து கொள்ளவும்.
Skewer ரை தொடர்ச்சியாக திருப்பி விட்டு கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது தான் சிக்கன் துண்டுகள் அனைத்து புறமும் சமமாக வெந்து இருக்கும்.
இதை அவனில் செய்வதாக இருந்தால் அவனில் சுமார் 450 டிகிரி பாரன்ஹீட்க்கு pre heat செய்து இந்த சிக்கன் துண்டுகளோடு இருக்கும் Skewer களை ஒரு தட்டில் வைத்து அதை அவனில் வைத்து சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.
10 நிமிடத்திற்கு பிறகு அவனில் இருந்து அந்த தட்டை கவனமாக எடுத்து Skewer ரை திருப்பி வைத்து மீண்டும் அதே அவனில் வைத்து சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை அதை வேக விட்டு வெளியே எடுக்கவும்.
பின்பு இதை ஒரு தட்டில் வைத்து அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை ஊற்றி பின்பு அதன் மீது ஃப்ரெஷ் கிரீம்மை ஊற்றி, அதனுடன் கேரட், வெங்காயம், மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை நறுக்கி வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் மலாய் டிக்கா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Latest article