சென்னை மற்றும் புறநகரில் மழைநீர் வடிகால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனாலும் பல இடங்களில் 75 சதவீதம் அளவுக்கு தான் பணிகள் நடந்துள்ளன. எனவே பணிகளை விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறார். வடகிழக்கு பருவமழை இன்னும் 20 நாட்களில் தொடங்கிவிடும் என்பதால் சென்னை புறநகரில் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளன என்பதை முதல்-அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். இதற்காக தென் சென்னைக்கு உட்பட்ட 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செம்மஞ்சேரி டி.எஸ்.எப். பின்புறம், பெரும்பாக்கம் அருகே உள்ள பாலம், நேதாஜி நகர் பிரதான சாலை, வேளச்சேரி-தாம்பரம் சாலையில் உள்ள பாலாஜி பல் மருத்துவ கல்லூரி அருகே கட்டப்படும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார். வேளச்சேரி ஏ.ஜி.எஸ், பள்ளிக்கரணை, தாமரைக்குளம் பகுதி, ;காலனி, அடையார் கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலை, இந்திரா நகர் 3-வது பிரதான சாலை ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். மொத்தம் ரூ.174.48 கோடி செலவில் நடைபெற்று வரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 29ஃ09ஃ2022 அன்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.