Saturday, November 23, 2024

சர்வதேச தரத்தில் சிங்கார சென்னை 17 திட்டங்கள்…

சென்னை மாநகராட்சியை சர்வதேச   தரத்தில்  மேம்படுத்தும் வகையில்,  'சிங்கார சென்னை 2.0 திட்டம்'   செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்    வாயிலாக,       17 திட்டங்களை  வகுத்து,  அழகாக்கும் பணிகளை       மேற்கொள்ள, பொதுமக்களிடம்         மாநகராட்சி கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெற உள்ளது. இதில், வட சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையை       சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணியை, சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சாலை  நடுவே  பூங்கா  அமைத்தல், பூச்செடிகள்   வைத்தல்,  அரசியல் கட்சிகளின்       சுவர்      ஓவியங்களை அழித்து, கலாசார வண்ண ஓவியங்கள் வரைதல்,  போஸ்டர்  ஒட்ட  தடை உள்ளிட்டவை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இவுற்றில்  பல  பணிகள் ஏறத்தாழ முடிந்து, அண்ணா நகர் ரவுண்டானா,  கிண்டி  கத்திபாரா உள்ளிட்ட  பகுதிகள்  மக்களை கவரும் வகையில் உள்ளது.
இந்நிலையில்,  சென்னையின் அனைத்து  பகுதிகளையும்  சர்வதேச தரத்தில்  உயர்த்துவது  குறித்த ஆலோசனை  கூட்டம்,  மாநகராட்சி கமிஷனர்  ககன்தீப்  சிங் பேடி தலைமையில்  நடைபெற்றது. 

Latest article