Friday, November 22, 2024

சப்பாத்தி லட்டு

தேவையான பொருட்கள்:
சப்பாத்தி – 6
பொடித்த வெல்லம் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பாதாம் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

செய்முறை:
முதலில் சப்பாத்திகளை துண்டுகளாக்கிக் கொண்டு, மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின் அதில் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் அரைத்ததை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் நெய், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து கையால் பிசைந்து விட வேண்டும்.
பின்பு சிறிது கலவையை எடுத்து, அதை இறுக்கமாக உருட்டிக் கொள்ள வேண்டும். இதுப் போன்று அனைத்தையும் உருட்டினால், சப்பாத்தி லட்டு தயார். இந்த லட்டுகளை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால், 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
குறிப்பு:
சப்பாத்தி லட்டுவிற்கு பாதாமை தவிர முந்திரி, பிஸ்தா என்று எந்த நட்ஸ்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வெல்லம் இல்லாதவர்கள், சர்க்கரையை கொண்டும் செய்யலாம். ஆனால் சர்க்கரையை பயன்படுத்துவதாக இருந்தால், 2 1/2 டேபிள் ஸ்பூன் பயன்படுத்துங்கள் போதும்.

Latest article