Saturday, November 23, 2024

பன்னீர் பாயாசம்

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர் /4 கப்

பன்னீர் – 200 கிராம்
சர்க்கரை – ½ கப்
குங்குமப்பூ – சிறிது
ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்
நறுக்கிய பாதாம்- 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பன்னீரைத் துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான தீயில் பால் பாதியாக குறையும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும்.
இப்போது அதில் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து கிளறி நன்கு சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்பு அதில் துருவிய பன்னீரை சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
இப்போது பாயாசம் சற்று கெட்டியாகவும், க்ரீமியாகவும் மாறும்.
அதன் பின் அதில் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாம், பிஸ்தாவை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து இறக்கினால், பன்னீர் பாயாசம் தயார்.

Latest article