தேவையான பொருட்கள்:
பாதாம் – 1/2 கப் (இரவில் ஊற வைத்து, காலையில் அரைத்தது)
சர்க்கரை – 1/2 கப்
பால் – 1 கப்
நெய் – 1/2 கப்
குங்குமப்பூ – சிறிது (பாலில் ஊற வைத்தது)
செய்முறை:
- முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி கொள்ள வேண்டும்.
- பின்னர் அதே வாணலியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விட வேண்டும்.
- பிறகு அதில் பாதாம் பேஸ்ட் சேர்த்து, பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
- அப்படி கிளறி விடும் போது, கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் பாதி நெய் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விடும் போது, நெய்யை அல்வா முற்றிலும் உறிஞ்சிவிடும்.
- அப்படி நெய்யானது முற்றிலும் வற்றியதும், வாணலியை இறக்கி, மீதமுள்ள நெய் சேர்த்து ஒருமுறை கிளறி குளிர வைத்தால், சுவையான பாதாம் அல்வா ரெடி.